இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுசீந்திரம்

படம்
947 ஆம் ஆண்டு, பராந்தகச் சோழன் ஆட்சியாண்டில், சுசீந்திரம் கைலாசநாதர்‌ சன்னதியில்‌ கிழக்குப்‌ பக்கத்‌தில்‌ உள்ள பாறையில் செதுக்கப்பட்ட கல்வெட்டு, களக்குடி (களக்காடு) நாட்டைச்‌ சேர்ந்த கரவந்தபுரத்து வியாபாரி, ஒரு கை அரங்கன்‌  என்பான்‌ சுசீந்திரத்து எம்பெருமானுக்கு நாள்‌ ஒன்றுக்கு ஒன்றரை ஆழாக்கு  நெய்‌ அளிப்பதற்காக எழுபத்தைந்து ஆடுகளையும்‌; சுசீந்திரத்துத்‌ திருவேங்கட.  நிலைக்கு நாள்‌ ஒன்றுக்கு ஆழாக்கு நெய்‌ அளிப்பதற்காக இருபத்தைந்து ஆடுகளை  யும்‌ அளித்ததைக்‌ குறிக்கிறது.  இதே போன்று சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் கிபி 976 காலத்திய கல்வெட்டிலும் இதுபோன்ற நன்கொடை பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.  அதே நேரத்தில் இங்கு சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் 1000 வருடங்களுக்கு முன்பே சன்னதிகள் தனித்தனியாக தான் இருந்து இருக்கின்றன. வடக்கேடம் தெற்கேடம் என பிரித்து அறியப்படும், அங்கே திருச் சிவிந்திரத்து மகாதேவரும், விண்ணகர பெருமாளும் வீற்று இருக்கிறார்கள். விண்ணகர பெருமாளுக்கு முன்பு அங்கே அமரபுஜங்க பெருமாளே முக்கியத் துவம் பெற்று இருக்கிறார். கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் மாறன் சடையன் ...

குழந்தை

கைநீட்டி புன்னகைத்து தோள்மாற்றி தோள்மாற்றி  ஒவ்வொருவர் கையிலுமாக தவழும் குழந்தை எத்தனை பெரிய  வானத்தை  எளிதாக வரைந்து விடுகிறது. ......... கூடைக்குள்ளும் கூண்டுக்குள்ளும் குழந்தையை  வளர்க்கப் பழகிய மனிதனின் உலகில் கையில் குழந்தையை  தருபவன் தேவன் ஆகிறான். ......... தலைக்கு மேல்  தூக்கி வைத்து கொஞ்சும் குழ்ந்தையின் டைப்பர் வன்மையை  மெலிதாக கீறி வைக்கிறது, வாயோரத் தேன்! ......... தன் மொழியின் முதல் வடிவத்தை அணைப்பின் கதகதப்பில் இருந்தே  கற்றுக் கொள்ள  ஆரம்பிக்கிறது குழந்தை! ....... ஆதார் அட்டையில்  தங்கள் புகைப்படம் சரியில்லை, என்று  வருத்தப்படுபவர்கள், மகப்பேறு மருத்துவமனையின் குழந்தைகள் கவனிப்பு அறையில் அடையாள tag கட்டிய காலை அசைத்து அசைத்து உலகை சிணுங்கி சிணுங்கி வரவேற்கும் பசலையை கண்டு சமாதானம் கொள்ளுங்கள். ........

ஊருக்கு மாவிடித்தல்

ஊருக்கு மாவிடியுங்கள், ஆனால் லட்டை சபிக்க வேண்டாம். (இப்போ தும்மினால் தான் சரி) பூந்தியும் லட்டுவும் வேறு வேறு அல்ல. கல்யாண அடியந்திரங்களுக்கும், இழவு வீடுகளுக்குமே பொது விளம்பல் 'பழ'காரத்தில் ஒன்று. மறுவீடுக்கு, பெண் பிள்ளைகள் சமைந்த வீடுகளில் இறந்த வீட்டு "கிழமை முறை"களில் பூந்தியும் பழமும் ஊர் விளம்பவில்லை என்றால், ஊருக்குள் பெரிய ஆவலாதி தான். "ஆளத்து போனவன்", "ஊருக்கு விளம்ப வக்கில்லை போல்", "வீட்டுக்கு வாழ வந்தவ பூந்தியும் பழமும் கூடவா கொண்டு வர துப்பில்லை" என்று வசைகளை எதிர் கொள்ள நேரிடும். இந்த வசைகளை அதிகம் உதிர்ப்பது, சடங்கு வீட்டிலும் இழவு வீட்டிலும் தீட்டு என கைநனைக்காமல் தன்னை பெருவிர்த்திக்காரனாக காட்டும் சிறுபுத்திக்காரர்களே! பூந்திக்கு முன் மாவுதான். மாவு எனில் அரிபெட்டியில் ஊறப் போட்ட பச்சரிசியை வெள்ளைத் துணியில் சிறிது உலரவிட்டு உரலில் போட்டு குடும்பம் சுத்தி நின்று உலக்கையில் இடிக்கும். ஊர் கதை குடும்பக் கதை எல்லாம் கூட இடிபடும். மெத்தெனும் மாவினில் உலக்கை விழும் "பொத்-பொத்" எனும் சத்தத்தை மீறி எதுவும் ரகசியங்க...

சுசீந்திரம்

சுசீந்திரம் கோவிலை சுற்றியும், ஊருக்குள்ளும் 266 வருடங்களுக்கு முன்பு இருந்த கோவில்கள், மடங்கள், மண்டபங்கள், குளங்கள், இவை இவை. உதய மார்த்தாண்ட விநாயகர்  வீரமார்த்தாண்ட விநாயகர். மேலவாசல் விநாயகர். அபிமானம் காத்த விநாயகர். தலக்குளம் விநாயகர்.  சாக்ஷி விநாயகர். கிராம விநாயகர். நெற்களஞ்சியம். வட்டப்பள்ளி மடம். முள்ளமங்கலம் போத்தி மடம். தந்திரி மடம். வேம்படி கொட்டாரம் மற்றும் ஹோமப்புறை. கீழ்சாந்தி போத்தி மடம். பொதுமடம். அனுப்பு மண்டபம். குலசேகர விநாயகர் ராணிக் கொட்டாரம். நட்டுவான் வீடு புகழும் பெருமாள் சாஸ்தா. தர்மபுரம் மடம். புத்திலம் போத்தி மடம் வெளியறை போத்தி மடம். குலசேகர பெருமாள். தெற்குமண் போத்தி மடம். செக்கை கொட்டாரம். ஶ்ரீதரமங்கலம் போத்தி மடம். பேரம்பலம் சிதம்பரேஸ்வரர். வண்டிமலச்சி அம்மன் கோயில். குற்றம்பள்ளி போத்தி மடம். அரசில் போத்தி மடம். சோமாசிமங்கலம் போத்தி மடம். அரசடி விநாயகர். (அரச மரம் இல்லாமல் ஆனது. கிழக்கு நோக்கி இருந்த விநாயகரை தூக்கி, குளத்தங்கரையில் மேற்கு நோக்கி தெருவில் போட்டாச்சு. தெருவை அடைத்து கோவிலும் கட்டியாச்சு) ஶ்ரீமத் துவாரகை  திருவாடுதுறை மடம...

தெருத் திரை

நாகர்கோவிலில் இரண்டரை தியேட்டர்கள் இருக்கிறது. இரண்டு தியேட்டர்களில் நான்கு ஷோக்களும், மாலை இரவு மட்டும் ஒரு தியேட்டர் செயற்படுவதால் அது அரை தியேட்டர் ஆகிறது. பகல் காட்சிக்கு வெளியே இருக்கும் வெளிச்சத்தில் திரைக் காட்சிகள் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் இந்த நல்ல முடிவு எடுத்து இருக்கலாம். தெருக்களில் திரைகட்டி சினிமா போட்ட காலங்களில், தெருவிளக்குகளை மறைக்க, ஆப்பரேட்டரோடு வரும் உதவி ஆள் கோணி சாக்குகளை கொண்டு மின்கம்பத்தில் ஏறி எரியும் விளக்குகளை சுற்றி மூடுவர். மரத்தால் ஆன மின்கம்பங்கள் இருந்தது, முன்னதாக காலையிலேயே கடப்பாரையால் இரண்டு குழிதோண்டி கம்புகள் அல்லது கம்பிகள் இரண்டு ஓரங்களுக்கு ஒன்று என நடுவார். கருக்கல் தாண்டி, சுற்றிக் கொண்டு வந்திருக்கும் திரைச் சீலையை விரித்து குறுக்கு கம்பியில் இணைத்து இரண்டு கம்புகளிலும் கட்டி விட்டால், அதன் பிறகு அத்தெருக்களில் சைக்கிள் நுழைய அனுமதி இல்ல. "திரை கட்டியாட்சு" என கயிறு வண்டிக்குள் ஏறிய வாண்டுப் பயணிகள் தெரு சுற்றி வந்து தகவல் அறைந்திருப்போம். அடுத்து குழல்வடிவ ஸ்பீக்கர்கள் இருபுறமும் கட்டியதும், "ஐ! ரேடியோ காட்டியாட்சு...

சுசீந்திரம்

சுசீந்திரத்தில் கோபுரமாக எழுந்து நிற்பது காலங்காலமாக நாஞ்சில் பாசனபகுதிகளில் ஓடிப் பாய்ந்த மகேந்திரகிரி மலை வண்டல். மகேந்திரகிரி மலையின் வடமேற்கு எல்லையில் சுருளோடு எனும் இடத்தில் இருந்து உற்பத்தி ஆகும் பழையாறு தென்கிழக்காக பாய்ந்து மணக்குடி கழிமாரில் கடலில் கலக்கிறது. நாஞ்சில் நாட்டு பாசன தேவைக்கு அனந்தன் ஆறு புத்தனாறு என இரு கிளை ஆறுகள் வெட்டப்பட்டு உள்ளது. அனந்தன் ஆறு பழையாறின் மேற்கு கரை விவசாய பாசனத்திற்கு எனில், கிழக்குப் பகுதிக்கு புத்தன் ஆறு. இது பூதப்பாண்டி அருகே மண்ணடியில் இருந்து பிரிகிறது. இதற்கு அடுத்து வீரநாராயண மங்கலம் அருகே தேரைகால் வெட்டப்பட்டு திருப்பதிசாரம் வழியாக தத்தையார்குளம் சென்று சேர்கிறது. தத்தையார்குளத்தில் மேல் கீழ் நிரம்பி தேரூர் பெரியகுளம் பாயும் நீர் அடுத்தடுத்து குளங்களை நிரப்பி பழையாறில் சுசீந்திரம் கடந்து செங்கட்டிப் பாலம் அருகே சேர்கிறது.  மகேந்திரகிரியின் தாது வளமிக்க மணல் பழையாறு வழியாக சேர்ந்து தேரைகால் அதைக் கொண்டு வந்து தத்தையார் குளம் சேர்க்கிறது. தத்தையார் குளத்தின் வண்டல் விவசாய பூமிக்கு பெரிய வரப் பிரசாதமாக இருந்து இருக்கின்றது. அதுபோல அத...

சுசீந்திரம்

பிரம்மரூப விநாயகர்: மும்மூர்த்திகளான சிவன் பிரம்மா விஷ்ணு மூவரும் காட்சிக் கொடுத்த இடம் சுசீந்திரம் என்பது அதன் தலவரலாறு. கல்வெட்டு அமைப்புகளின் படியும், கோவில் அமைந்திருக்கும் உயரத்தை பொறுத்தும், கைலாசநாதர் ஆரம்பகாலத்தில் இருந்ததாக கருத முடிகிறது. மரத்தின் கீழ் தெய்வத்தை வழிபடும் தொன்மையின் அடிப்படையில் கொன்றையடி நாதர் அடுத்த இடத்திற்கு வருகிறார். வடக்கேடம் தெற்கேடம் எனும் இரு பிரிவுகளாக இருக்கும் தற்போதைய மூலஸ்தனம் சிவன் விஷ்ணு இருவருக்கும் ஆனது. மண்டப அமைப்புகளின் படி இது அவ்விரு சன்னதிகளில் இருந்து காலத்தால் பின் தங்கியது.  சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் தனித் தனி சன்னதி இருக்க பிரம்மாவுக்கு எங்கே? கோவில் நுழைவாயில் சுதை சிற்பத்திலும் இல்லை, திருவிழா வாகனங்களிலும் இல்லை. பிரம்மா எங்கே இருக்கிறார்? பிரம்மாவுக்கென அர்ப்பணிக்கப்பட்ட சன்னதிகள் கட்டப்படக் கூடாது என்பது புராதன நம்பிக்கை. லிங்க வழிபாட்டின் படி பிரம்மா ஒரு பாவமூர்த்தி. அவர் இருக்கும் இடத்தில் அவர் மற்ற தெய்வங்களின் உருவத்தை எடுத்துக் கொள்கிறார் என்பது நம்பிக்கை.  இங்கேயும் வடக்கேடம் சிவன் தெற்கேடம் விஷ்ணுவை வழிபட்டு ந...

பெண் குழந்தைகள் தின பதிவு

கல்லூரி ஒன்றின் விடுதியில் இருந்து மாணவிகள் ஊர் திரும்புகிறார்கள். கூட்டமற்ற பேருந்து ஒன்றின் இடதுபுற இருக்கைகளில் ஒன்றன்பின் ஒன்றாக ஜன்னலோரம் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் வலதுபுற இருக்கைகளிலும் அவர்களின் கைப்பைகள் இருக்கிறது. அவர்களின் உரையாடல் பேருந்தை உட்புறமாக கோர்த்துக் கொண்டு இருக்கிறது. ஒரு நீள் மின்கம்பியின் மீது அமர்ந்திருக்கும் பறவைகள் இசைவடிவமாதல் போன்று பேருந்தும் இசையோடு நகரத்திற்குள் நுழைகிறது. நகரத்தின் பிரபல நகைக்கடை சீருடையோடு பேருந்தில் ஏறுகிறாள் இளம் பெண் ஒருத்தி. உடன் சிவப்புநிற வேட்டியும் ஓட்டுனரின் காக்கி சீருடையோடும் மகளை வேலையில் இருந்து அழைத்துச் செல்லும் தகப்பன். இருவரும் வலது புற சீட்டில் ஒன்றாக அமர்கிறார்கள். நகரத்தின் இன்னோரு மூலையில் இருக்கும் பேருந்து நிலையம் வரை மகள் பேசிக் கொண்டே வருகிறாள். 240 ரூபாய் பொருள் ஒன்றை 200 க்கு பேரம் பேசி வாங்கியதை தந்தை பெருமையாட கூறிக் கூறி குழந்தையாகிறாள். ஒரு வார்த்தையில் இருந்து இன்னொரு வார்த்தைக்கு இடைவெளி அற்று இறுக்கிப் பிடித்த மூச்சுகளால் கோர்த்துக் கொண்டிருக்கிறாள் அன்றைய நாளின் அனைத்து நி...