சுசீந்திரம்

947 ஆம் ஆண்டு, பராந்தகச் சோழன் ஆட்சியாண்டில், சுசீந்திரம் கைலாசநாதர்‌ சன்னதியில்‌ கிழக்குப்‌ பக்கத்‌தில்‌ உள்ள பாறையில் செதுக்கப்பட்ட கல்வெட்டு,

களக்குடி (களக்காடு) நாட்டைச்‌ சேர்ந்த கரவந்தபுரத்து வியாபாரி, ஒரு கை அரங்கன்‌ 
என்பான்‌ சுசீந்திரத்து எம்பெருமானுக்கு நாள்‌ ஒன்றுக்கு ஒன்றரை ஆழாக்கு 
நெய்‌ அளிப்பதற்காக எழுபத்தைந்து ஆடுகளையும்‌; சுசீந்திரத்துத்‌ திருவேங்கட. 
நிலைக்கு நாள்‌ ஒன்றுக்கு ஆழாக்கு நெய்‌ அளிப்பதற்காக இருபத்தைந்து ஆடுகளை 
யும்‌ அளித்ததைக்‌ குறிக்கிறது. 

இதே போன்று சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் கிபி 976 காலத்திய கல்வெட்டிலும் இதுபோன்ற நன்கொடை பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. 

அதே நேரத்தில் இங்கு சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் 1000 வருடங்களுக்கு முன்பே சன்னதிகள் தனித்தனியாக தான் இருந்து இருக்கின்றன. வடக்கேடம் தெற்கேடம் என பிரித்து அறியப்படும், அங்கே திருச் சிவிந்திரத்து மகாதேவரும், விண்ணகர பெருமாளும் வீற்று இருக்கிறார்கள். விண்ணகர பெருமாளுக்கு முன்பு அங்கே அமரபுஜங்க பெருமாளே முக்கியத் துவம் பெற்று இருக்கிறார். கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் மாறன் சடையன் காலத்தில் அமரபுஜங்க பெருமாளுக்கு தங்க நகைகளும் தங்க கிரீடமும் நன்கொடை வழங்கிய கல்வெட்டு இருந்தாலும் அதன்பிறகு வேறெந்த கல்வெட்டிலும் அத்தெய்வம் குறித்த தகவல்கள் முக்கியத்துவம் இல்லாமல் போயிற்று. திருவேங்கட விண்ணவர பெருமாளுக்கு முழு தங்க அங்கி 1745 இல் தான் வழங்கப்பட்டு இருக்கிறது. 

அமர புஜங்க பெருமாள் பள்ளி கொண்ட பெருமாளாக 12 ஆம் நூற்றாண்டு அமைந்த முதல் பிரகாரத்தில் இப்போது எந்த முக்கியத்துவமும் இல்லாமல் இருக்கிறார். சுசீந்திரம் அடுத்த ஆஸ்ரமத்தில் இருக்கும் பெருமாளும் இதே பெயரில் தான் அழைக்கப் படுகிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுசீந்திரம் திருவிழா

அம்மையப்ப பிள்ளை

இசை