குழந்தை

கைநீட்டி புன்னகைத்து
தோள்மாற்றி
தோள்மாற்றி 
ஒவ்வொருவர்
கையிலுமாக
தவழும் குழந்தை
எத்தனை பெரிய 
வானத்தை 
எளிதாக வரைந்து விடுகிறது.

.........

கூடைக்குள்ளும்
கூண்டுக்குள்ளும்
குழந்தையை 
வளர்க்கப் பழகிய
மனிதனின் உலகில்
கையில் குழந்தையை 
தருபவன் தேவன் ஆகிறான்.

.........

தலைக்கு மேல் 
தூக்கி வைத்து
கொஞ்சும் குழ்ந்தையின்
டைப்பர் வன்மையை 
மெலிதாக கீறி வைக்கிறது, வாயோரத் தேன்!

.........

தன் மொழியின்
முதல் வடிவத்தை
அணைப்பின்
கதகதப்பில்
இருந்தே 
கற்றுக் கொள்ள 
ஆரம்பிக்கிறது
குழந்தை!

.......

ஆதார் அட்டையில் 
தங்கள் புகைப்படம்
சரியில்லை, என்று 
வருத்தப்படுபவர்கள்,
மகப்பேறு மருத்துவமனையின்
குழந்தைகள் கவனிப்பு அறையில் அடையாள tag கட்டிய காலை அசைத்து அசைத்து உலகை சிணுங்கி சிணுங்கி வரவேற்கும் பசலையை
கண்டு சமாதானம் கொள்ளுங்கள்.

........

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுசீந்திரம் திருவிழா

அம்மையப்ப பிள்ளை

இசை