சுசீந்திரம்
"2000 ஏக்கர் பாசன வசதி பெறும் பரந்து விரிந்த வயல்வெளிகள், அலை அலையாக தென்னை மற்றும் பனைமரங்கள். மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு இடையே மா, புளி, மருத, வேம்பு, வாழை மரங்கள். குளங்கள் குட்டைகள் ஆறு மற்றும் அதிலிருந்து பிரிந்து விரிந்து செல்லும் வாய்க்கால்கள், எல்லாவற்றிலும் மேலாக நெருக்கமாக பூத்துக் குலுங்கி கண்ணுக்கு குளிர்ச்சியான மலர்தோட்டங்கள்" என சுசீந்திரம் கோபுர உச்சியில் தான் பார்த்த அனுபவத்தை எழுதுகிறார் K.K.PILLAI அவர்கள். இப்போ ஏறி பார்த்தால் தெற்கில் ஒரு புறவழிச் சாலை, வடக்கே ஒரு புறவழிச் சாலை கிழக்கே இரண்டும் சேருமிடம். வடக்கே பெருநகரம், இதையெல்லாம் காணாதிருக்க சுசீந்திரம் கோபுரத்தை சுற்றி சுற்றி எழும்பிக் கொண்டிருக்கும் பலமாடி வீட்டுக் கட்டிடங்கள். இவையன்றி வேறொன்றும் இல்லை தாணுமாலயனே!