சுசீந்திரம்
மா. சிதம்பர குற்றாலம் பிள்ளை 1940 இல் எழுதிய சுசிந்தை மான்மியம் நூலில் இருந்து;
திருமலைநாயக்கன் இயற்றிய திருப்பணி.
தன்பெரிய படையுடனே மதியும் நல்விதியும்
சார்ந்திடவோர் அரசனாய்ச் சாற்றிய வந்நாய்க்கன்
முன்பெரிய மதுரையெனு முதுநாட்டை ஆண்டு
முக்கணூறு சொக்கரடி முறையேத்தி நின்று
வன்பெரிய நாய்க்கர்தம் மாப்படையாற் பொருது
மாநாடு பலசேர்த்து வள நாஞ்சில் நாட்டின்
மன்பெரிய சுசீதையெனும் மாப் பதியின் ஊற்று
மகிழ்ந்து இனிது தானுறைய மாளிகை ஒன்று அமைத்தான்.
அந்த மாநாய்க்கனேவால் அமைத்த
அணியுறு மாளிகை அதனிற்
சொந்தமாதரோடு உறையும் நாள் இறைவன்
அறக்கமா வாயிலைத் திறக்கும்
முந்துமாத் தனுவே (ஏ)காதசி வரத்தன்
முதல்வனாம் அழகனை நினைந்து
இந்த மாச் சுசிந்தை ஆலயத்து எழுந்த
எம்பிரான் இணையடி தொழுந்தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக