சுசீந்திரம்

"ஒரு அறுசமயக் கோவிலும், CCTV கேமரா கடவுளும்."

           - முத்துசுவாமி மகாதேவன்.

"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்" - திருமூலர்.

உடல் இருக்கும்வரை தான் உயிருக்கு மதிப்பு என்பது மனிதகுலத்தின் நியதி மட்டுமல்ல கடவுளாருக்கும் பொருந்தும். 

வேதங்களை ஏற்றுக் கொண்ட இந்து மதத்தின் ஆறு சமயங்களாக ஆதி சங்கரர் கூறுவது,

கணபதி வழிபாட்டை கொண்ட "காணபத்யம்", முருக வழிபாட்டைக் கொண்ட "கௌமாரம்"
சக்தி வழிபாட்டைக் கொண்ட "சாக்த்தம்",
சிவ வழிபாட்டை கொண்ட "சைவம்"
திருமாலைக் கொண்ட "வைணவம்"
மற்றும் தன் ஒளியாலும் சக்தியாலும் இவ்வுலகை படைக்கும் சூரியனை கொண்ட "சௌரம்"

பல இடங்களில் ஓரிரு சமயங்கள் சிறப்பாக இருந்தாலும், அறுசமய வழிபாட்டு தெய்வங்களும் ஒன்றாக காட்சி அளிக்கும் கோவில் தான் சுசீந்திரம்.

மும்மூர்த்திகள் ஒன்றாக காட்சி தரும் தலவரலாறும், அம்மனோடு சிவன் விஷ்ணு கணபதி முருகன் சூரியன் உட்பட தனித்தனி சன்னதிகளும் கொண்ட கோவில் அமைப்பு இங்குள்ளது.
அறுசமயத்தின் ஒற்றுமைக்கு சான்றாக விளங்குகிறது இக்கோவில்.

சூரியன் எங்கிருக்கிறார் இக்கோவிலில் என்றால், இந்திரன் என்பதே சூரியக் கடவுள் ஆகும். இங்கே தான் குற்றமற்றவன் என்பதை கொதிக்கும் நெய்யில் இறங்கி இந்திரன் நிரூபித்ததாக சொல்லப்பட்ட தலவரலாறு காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்ட ஒன்றாகும். இந்திரன் எங்கே கொதிக்கும் நெய்யில் இறங்கினான் என்றால், அவன் இறங்கிய அதே இடத்தில் தான் நம்பூதிரிகள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க கைமுக்கு நிகழ்ந்த இடமும் ஆகும். வடக்கேடம் கொடிமரம் இருக்கும் பீடத்திற்கு முன் மேற்கே கொதிக்கும் நெய் நிரப்பிய உருளியை வைத்து, உள்ளே தங்கத்தால் ஆன நந்திப் போடப் படுகிறது, குற்றம் சுமத்தப்பட்ட நம்பூதிரி இந்திர விநாயகர் முன்னிருக்கும் தீர்த்தக் கிணற்றில் இறங்கி குளித்துவிட்டு வந்து கொதிக்கும் நெய்யில் கையை விட்டு நந்தியை எடுத்து கோவிலை சுற்றி வரவேண்டும். நெய்யினில் கையை விடும் நேரம், அந்த நெய் பாத்திரத்தின் உள்ளே சூரியன் விழும் நேரமாக இருக்க வேண்டும் என்பது பிரத்யாய விதி. அது விழுவதற்காக நேர் மேலே செவ்வக வடிவ இடைவெளி விதானத்தில் போடப்பட்டு உள்ளது. காரகக்கலகம் என்பது அதன் பெயர். இதுவே சூரியக் கடவுள் உள்ளே நுழையும் இடம்.

இங்கே சிவன் விஷ்ணு முருகன் கணபதி உமையாள் உட்பட அனைத்து உருவ தெய்வகளுக்கு இருப்பதை விடவும் எவ்வளவு மேன்மையான பக்தி,
பெயர் காரணம் பெற்ற இந்திரனாகிய-சூரியன் இக்கோவிலுக்குள் விழும் அவ்விடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை இங்கே காரகக்கலகத்தில் தொங்கவிடப்பட்ட CCTV கேமரா மூலம் அறிய முடிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுசீந்திரம் திருவிழா

அம்மையப்ப பிள்ளை

இசை