சுசீந்திரம்

சுசீந்திரம் கோவிலில் காணக்ககிடைப்பெற்ற கல்வெட்டுகளில் அதிகமாக மன்னர் மற்றும் அரசுகளின் பெயர்கள் இல்லாத பல கல்வெட்டுகள், 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதிகள். இந்த நேரங்களில் இப்பகுதி விஜயநகர மன்னர்கள் மற்றும் நாயக்கர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டு இருந்தது. "சதா சேர்வை" என காணக்கிடைக்கும் கல்வெட்டுகள் இவர்கள் காலத்தியவை. ஆனாலும் இவர்கள் இக்கோவிலுக்கு செய்த கலைக் கொடைகள் அபரிமிதமானவை. கோவில் கோபுரத்தின் அடிப்பக்கம் விஜயநகர மன்னர் காலத்திலும், மாக்காளை கருடாழ்வார் மற்றும் கிழக்குப் பிரகாரம் திருமலை நாயக்கர் காலத்திலும் அமைக்கப் பட்டுள்ளது. தெப்பகுளத்தின் வடக்குப் பகுதி நிலங்களில் நாயக்கர் மடம் அமைத்து இருந்தனர். அதை திருவாவடுதுறை மடத்திற்கு ஒப்படைத்து அதோடு அதிக இடங்களில் நிலங்களையும் ஒப்படைத்து சமயப்பணி வளர்த்தனர். அதேபோல் நான்கு ரதவீதிகளை விரிவுபடுத்தியது நாயக்கர் காலத்தில், அதை ஒட்டியே இங்கு திருவிழாக்களில் தேர் ஓடிய வைபவம் நிகழ்ந்து இருக்கும். ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் ஆடிப்பூரத் தேர் நிலை நின்ற பிறகு மதுரை வரை வேட்டுகள் போட்டு நாயக்க மன்னர்களுக்கு செய்தி சொன்னது போல, பிற்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்களுக்கும் சுசீந்திரம் தேர் நிலை நின்ற செய்தி சொல்லப் பட்டுள்ளது. அதன் பிறகே அவர்கள் உணவு அருந்தி உள்ளனர்.

ரத வீதிகளை விரிவு படுத்திய திருமலை நாயக்கரால் அமைக்கப்பட்டது தான், தெற்கு தெருவின் மேல் எல்லையில் அமைக்கப்பட்ட "நாயக்கர் கொட்டாரம்." (T.S.T. page 135) அதன் பின்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் அது "செக்கைக் கொட்டாரம்" என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து செச்சி சேச்சி ஆகி இப்போது எக்க்ஷிக் என்று கூட அழைக்கப் படுகிறது. கிராமத்தில் கொட்டாரம் அமைத்தது அந்த காலத்தில் மிகப்பெரிய அளவில் பேசப் பட்டதாக குறிப்பிடுகிறார் KK. PILLAI. அக்கொட்டாரம் இப்போது தனியார் ஆரம்பப்பள்ளி. அதற்கு முன் மின்வாரிய அலுவலகம். மார்த்தாண்ட வர்மா காலத்திலும் கூட "ராணிக் கொட்டாரம்" அமைக்கப் பட்டுள்ளது. அது இப்போது அரசு ஆரம்பப்பள்ளி. இவர்கள் காலத்தில் தெற்கு மற்றும் வடக்கு ரத வீதிகளில் எந்த குடியிருப்புகளும் இல்ல. மடங்கள் மட்டுமே இருந்து இருக்கின்றன. அதை சுட்டும் விளக்கப்படம் KK PILLAI புத்தகத்தில் உள்ளது இது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுசீந்திரம் திருவிழா

அம்மையப்ப பிள்ளை

இசை