சுசீந்திரம்

திருவாடிப் பூரம்.

சுசீந்திரம் முன்னூற்று நங்கை அம்மன் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வரும் கல்வெட்டு. கிழக்கு நுழைவாயிலின் இடது புறத்தில் உள்ளது. இது இங்கிருந்த தேவதாசிகள் சமுக அந்தஸ்தை குறிப்பதோடு திருநாள் ஆடிப்பூர செய்திகளை சொல்கிறது.

கொல்லம் 817 (கிபி 1631) சிவிந்திரமுடைய நயினார் கோவில் தெய்வக்கன்னிகளில் சிறப்புக்குடி மூத்தகுடி இடப்பாகம் மகள் மாதம்மைக் குட்டி இக்கோவிலில் உள்ள பாரி சைவருக்கு வயல்கள் எழுதிக் கொடுத்ததை கூறுகிறது. தேருர் பத்தில் எழுதிக் கொடுத்த வயல்களின் வருமானத்தில் முன்னூற்று நங்கைக்கு திருவாடிப் பூர நாள் சிறப்பும், திருவூசலும் பெரிய தேர் வீதி வளைய எழுந்தருளும் திருநாள் செலவுக்கு என்று குறிப்பிட்டு உள்ளது. தேரோட்டம் நடந்ததாக வேறெங்கும் குறிப்புகள் இல்லை. ஆனால் அம்மன் பெரிய தேர்-வீதியில் (ரதாவீதி) வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் நிகழ்ந்து இருக்கிறதையே அது குறிக்கிறது. 

ஆடிப் பூரம் அன்று அம்மனை திரு ஊஞ்சலில் வைத்து ஆட்டும் வைபோகமும் ஊசல் பிடிக்கும் பெண்களுக்கு பரிவட்டம் கட்டுவதையும் தெளிவாகக் காட்டுகிறது. 400 வருடங்களுக்கு முன் பெண்களுக்கான சிறப்பு அது.

கிபி 1040 கன்னியாகுமரி குகநாதீஸ்வர கோவிலில் தேவதாசிகள் பற்றிய குறிப்பு இருந்தாலும் சுசீந்திரம் கோவிலில் 1257 ஆம் ஆண்டு கல்வெட்டில் இருந்து தான் குறிப்புகள் வருகிறது. சுசீந்திரம் ஊரில் மட்டும் தேவதாசிகள் 32 குடிகளாக வாழ்ந்து வந்ததாகவும் அதில் ஒன்று முதல் 16 வரை சிறப்புக்குடி மேல்குடியாகவும், 17 முதல் 32 வரை முறக்குடியாக வாழ்ந்ததாக K.K PILLAI குறிப்பிடுகிறார்.

சுசீந்திரம் கோவிலில் சிலைகள் தூண்கள் மற்றும் மண்டபங்கள் கட்டிக் கொடுத்த தேவதாசிகள் அம்மனுக்கும் அளித்த சிறப்பு இக்கல்வெட்டு கூறும் உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுசீந்திரம் திருவிழா

அம்மையப்ப பிள்ளை

இசை