இடுகைகள்

ஆர். பத்மநாப பிள்ளையின் ஆரைவாய்மொழி வரலாறில் இருந்து

இராணி மங்கம்மாள் ஆட்சி பொற்கால ஆட்சி என்று திரிக்கப் பட்டதா? 1943 இல் எழுதிய "ஆரைவாய்மொழி வரலாறும் மீனாட்சி சுந்தரர் ஆலய வரலாறும்" எனும் தன்னுடைய புத்தகத்தில் ஆர். பத்மநாப பிள்ளை எழுதியதை படிக்கும் போது மாலிக் கபூரின் படையெடுப்பை நினைவு படுத்துகிறது. "கொல்லம்‌ 810ஆம்‌ ஆண்டு கணியாகுளத்தில்‌ இரவிக்குட்டிப்‌ பிள்ளைப்‌ போரில்‌ பல துன்பங்கள்‌ வந்தாலும் இறுதியில்‌ நாயக்கர்‌ படை தோற்றது, திருவாங்கூர்‌ படை வெற்றிபெற்றது. திருவாங்கூரின்‌ பழைய இசாஜதானி பத்மநாபபுரம் அன்றோ. இரவிவர்மன்‌ 859 முதல்‌ 893 வரை ஆண்டான்‌, இக்காலத்தில்‌ வடுகர்படை ஆரைவாய்மொழியில்‌ வந்தது. அவ்வழி நாஞ்சில் நாட்டில் புகுந்து கல்குளம்‌ வரையிலும்‌ சென்றது. அரசன்‌ கூட்டத்தோடே படை களைக்‌ கொன்றான்‌, இத்துன்ப மொழிகளைக்‌ கேள்விப்பட்ட மகாராணி இராணிமங்கம்மாள்‌ பழிவாங்க எண்ணி நரசப்பையன்‌ தலைமையில்‌ ஓர் பெரும்‌ படையை அனுப்பலானாள்‌, நாஞ்சில் நாட்டை அழித்‌துப்‌ பெண்களின்‌ நகைகளைப்‌ பறித்தார்கள்‌, கொடும்போர்‌ நடத்தப்பட்‌டது, நாஞ்சில் நாட்டிற்கு துன்பங்கள்‌ பலநேர்ந்தன. ஆனாலும் ராணி மங்கம்மாள் அனுப்பிய நரசப்பனையும் தோற

சித்ரா பவுர்ணமியும் குமரியும்

எதேட்சையாக அமைந்தது என்றாலும், சித்திரை முழநிலவு நாளில் நிலவாக நின்றிருக்கும் அம்மையை காண எங்கோ சென்ற வாகனம் அங்கு திரும்பியது. கடும்பச்சை நிற பாவாடையும் சந்தன நிற சட்டையுமாக மூக்குத்தி மின்ன மின்ன நின்றிருந்தாள் குமரி அம்மை. பகவதியோ மினாட்சியோ கன்னியாவோ கன்யாவோ மரியோ மேரியோ பெண்நபியோ கவுந்தியடிகளோ உங்களுக்கு ஒவ்வொரு மனம். அவள் இந்நிலத்தின் பெருவடிவம், பெருஅரண், பெருங்கருணை, பேரழகி சிறு தெய்வம். கருங்கற்கள் கூடத்தில் அவள் காதில் ஓங்கி ஒலிக்கும் வண்ணம் உரத்து அடித்துக் கொண்டிருந்தது அலை! வெள்ளை யானை போன்ற தோற்றத்தோடு நிலவை கண்ட அலைகள் மனதின் எழுச்சி போல் கரையில் வேக வேகமாக அடித்தாலும், கரை நோக்கி காற்று வீசாமல் இருந்தது இயற்கை முரண்.  பங்குனி முழு நிலவான பங்குனி உத்திரம் கடந்து சித்திரை முழு நிலவான சித்திரை நிறைந்த சித்திரை நாள் இடையேயான 28 சந்திரநாட்களே இந்திர விழா கொண்டாடப் பட்டிருக்கிறது.  "சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென அந்நாள்" (சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்த காதை). இந்திரன் மருதநிலத்து வேந்தன் அன்றி வேறில்லை. குமரி மண்ணின் மிகப் பழமையான இந்திரன் கோவில் சிவிந

கவிதை

படம்

பிறழ்வு

எவர் எனும் தலைப்பில் பாதசாரியின் கவிதை ஒன்று உண்டு. "நாலுபேர் பைத்தியம் எனச் சொல்லும் கசங்கியத் தோற்றத்தில் வந்தவர் கை ஏந்தினார் என்னிடம். மேலாடைப் பையில் கைவிட்டு காசு எடுக்கும் முன் ஆளைக் காணோம். வெளியில் எடுத்த காசை எனக்கு நானே கொடுத்துக் கொண்டாயிற்று ." பிறரை எதிர்கொள்ளும் யதார்த்தம் இது தான். உங்களை எதுவாக எடை போடுகிறார்களோ அங்கு இல்லாமல் இருங்கள். அவர்கள் இடும் எடைகளை அவர்களே சுமக்க வேண்டியது வரும் என்பதே உண்மை. நீங்கள் எழுதும் ஒரு பதிவில் பைத்தியம் என்று எழுத கைகள் நடுங்கியதுண்டா? பலமுறை எனக்கு நேர்ந்தது உண்டு. அந்த வார்த்தையை யாரை நோக்கியும் அல்ல எதன் பொருட்டும் வசை சொல்லாக சொல்ல மனம் கூசும். மனநிலை சரியில்லை என்பதும் கற்பிழந்தவள் என்று வசை சொல் சொல்லுவதும் வேறு வேறு இல்லை. கற்பு என்பதும் தெளிந்த மனநிலை என்பதும் இவ்வுலகில் கற்பனையான ஒன்று தான். மனநிலை குறித்தோ கற்பு குறித்தோ இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் வன்முறை ஏவுவது என்பது மட்டுமே இங்கு பிறழ்வு நிலை ஆகும். சமூகத்தில் கொள்கை கடிவாளம் மட்டுமே போட்டுத் திரிந்து மனித யதார்த்தவாதம் தெரியாத பல வறட்டு கொள்க

கவிதை

எதுவும் வராத நேரத்தில் சாலையை கடக்க, அங்கும் இங்கும் திரும்பிப் பார்க்கும் சிறுவனை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறது சாலையில் விழுந்து கிடக்கும் நிழல்.

சூந்த குளமும் அம்மையும்

மனிதனே குளிக்க மறுத்துவிட்ட சூந்தகுளத்தில் குளிக்க வைத்து தூக்கிச் செல்கின்றனர் அறம் வளர்த்த அம்மையை. சாக்கடை நறுமணம் கமழ பல்லக்கில் செல்லும் அவளுக்கு இன்று திருமணநாள். அதற்காக தாணுமூர்த்தி ஒன்றும் மூக்கைப் பிடித்துக்கொண்டு ஓடிவிடமாட்டார். அவர் குளித்து எழும் தெப்பக்குள புனிதமோ அதற்கும் மேலான ஒன்று. தண்ணீரின் நிறம் பச்சை என தெய்வத்தால் முடியாத அறிவியலால் சாத்தியமாகாத ஒன்றை மனிதன் நிரூபித்துக் காட்டியுள்ளான். குளம் புனிதம், குன்று புனிதம், கடற்கரை புனிதம் என்றதெல்லாம் கடவுளுக்கானதா? கடவுளின் பெயரால் இயற்கையை காப்பாற்றும் முன்னோர்களின் சூட்சமமா? கோயிலே கூடாது என்றவர்கள் குன்றுகளை பெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தெய்வம் இருக்கின்றது என்பர்வகள் அதன் சீரழிவுக்கு தெய்வத்தை பழக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதுதான் மனிதனின் மகத்தான குணம். குமரன் இருக்கும் குன்றெல்லாம் இன்று ஓரளவேனும் மிச்சப் பிடித்து இருக்கின்றது. முருகனே மலை என்றால், வெடி வைத்து முருகனை பிளக்க மனம் வராது. அப்படியே ஒருவன் இருந்தாலும் முருகனின் பெயரால் சமூகம் அந்த மலையை காக்கும் என்று தான் ஆண்டியாய் அவனை மேலேற்றி இருக்க முடியும

பரோட்டாக் கடை நாகரீகம்

எல்லா ஊர்களிலும் அடிக்கடி சாப்பிட்டு உள்ளேன். அந்த அனுபவத்தில் நாஞ்சில் நாடு வெஜ் சாப்பாட்டிற்கு ரொம்ப அனுக்கம் இல்லை தான். ஆனால் அசைவத்தில் அடித்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு ஊரிலும் அசைவத்தில் ஒருவகை சிறப்பாக இருந்தால், இங்கே அசைவத்தின் அனைத்து வகைகளும் சிறப்பாக கிடைக்கும். பார்டர் பரோட்டா கடையை கொண்டாடுறாங்க. நம்ம ஊர் அக்கரை இறக்கத்தில் இருக்கும் மணியன்ணன் கடைக்கு ஈடாகாது அது. தேரூர் மாஸ்டர் கடை டேஸ்ட் சாப்பிட்டால் இராமநாதபுரம் பரோட்டா பிரியர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள். குலசேகரன்புதூர் ஶ்ரீநிவாஸ் பரோட்டாக்கு கடையநல்லூர் பரோட்டா நெருங்க கூட முடியாது. விகேபுரம் சர்தாரில் மூனு வகை சால்னா இல்லாட்டீ பரோட்டா என்பது கேள்விக்குறி தான். சவேரியார் கோவில் Rk இல் கொத்து புரோட்டா வேறெங்கும் வாய்ப்பு இல்லை. அண்ணன் Murugesan Murugesan இன் ஒழுகினசேரி கடையில் கொத்துக்கோழி அடிச்சுக்க முடியாது. கூட சப்பாத்தியோ இடியாப்பமோ அள்ளும். வைரமாளிகையில் ஒரு நாள் சாப்பிட்டேன். நாட்டுக்கோழி நாட்டுக்கோழி அடிச்சுகிட்டாங்க. பொறிப்பு வைத்துக் கொண்டு பரோட்டா குழம்பை வைத்து திரும்பி விடுகிறார்கள். கிருஷ்ணன் கோ