ஆர். பத்மநாப பிள்ளையின் ஆரைவாய்மொழி வரலாறில் இருந்து

இராணி மங்கம்மாள் ஆட்சி பொற்கால ஆட்சி என்று திரிக்கப் பட்டதா? 1943 இல் எழுதிய "ஆரைவாய்மொழி வரலாறும் மீனாட்சி சுந்தரர் ஆலய வரலாறும்" எனும் தன்னுடைய புத்தகத்தில் ஆர். பத்மநாப பிள்ளை எழுதியதை படிக்கும் போது மாலிக் கபூரின் படையெடுப்பை நினைவு படுத்துகிறது. "கொல்லம்‌ 810ஆம்‌ ஆண்டு கணியாகுளத்தில்‌ இரவிக்குட்டிப்‌ பிள்ளைப்‌ போரில்‌ பல துன்பங்கள்‌ வந்தாலும் இறுதியில்‌ நாயக்கர்‌ படை தோற்றது, திருவாங்கூர்‌ படை வெற்றிபெற்றது. திருவாங்கூரின்‌ பழைய இசாஜதானி பத்மநாபபுரம் அன்றோ. இரவிவர்மன்‌ 859 முதல்‌ 893 வரை ஆண்டான்‌, இக்காலத்தில்‌ வடுகர்படை ஆரைவாய்மொழியில்‌ வந்தது. அவ்வழி நாஞ்சில் நாட்டில் புகுந்து கல்குளம்‌ வரையிலும்‌ சென்றது. அரசன்‌ கூட்டத்தோடே படை களைக்‌ கொன்றான்‌, இத்துன்ப மொழிகளைக்‌ கேள்விப்பட்ட மகாராணி இராணிமங்கம்மாள்‌ பழிவாங்க எண்ணி நரசப்பையன்‌ தலைமையில்‌ ஓர் பெரும்‌ படையை அனுப்பலானாள்‌, நாஞ்சில் நாட்டை அழித்‌துப்‌ பெண்களின்‌ நகைகளைப்‌ பறித்தார்கள்‌, கொடும்போர்‌ நடத்தப்பட்‌டது, நாஞ்சில் நாட்டிற்கு துன்பங்கள்‌ பலநேர்ந்தன. ஆனாலும் ராணி மங்கம்மாள் அனுப்பிய நரசப்பனையும் தோற்கச்‌ செய்தார்கள்‌. தோற்றாலும்‌ போகும்போது எல்லைப்‌ பக்கங்களில்‌ கொள்ளையடித்துச்‌ சென்றான்."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுசீந்திரம் திருவிழா

அம்மையப்ப பிள்ளை

இசை