கவிதை
புன்னகைகளை கடந்து செல்வது அவ்வளவு எளிதானது அல்ல.
புன்னகைகள் ஒரு கிளியின் நிறம் கொண்டு பறக்க வல்லது.
புன்னகைகள் சேமிக்கப் பழகிய கூட்டினுள் சிறகு முளைத்து பறக்கின்றன புழு பூச்சிகள்.
சாப்பாட்டு கூடங்களில் தேனீர் விடுதிகளில் புன்னகைகள் பரிமாறப்படும் போது சுவையும் கூடுகின்றன.
புன்னகைகளை தொலைத்த நவயுகன் ஒருவன் மதுக் கடை மேஜையில் அமர்ந்து புன்னகைகளைத் தேடிக் கொண்டிருக்கிறான்.
காகித கோப்பைகளில் சேமிக்கப் பட்ட மதுவில் கவர் தண்ணீரை பீச்சியடித்து குடித்து செல்லும் கொத்தனால் மட்டும் முடிகிறது தன் சட்டைப் பை நிறைய புன்னகைகளை சுமந்து செல்ல.
மீள்
கருத்துகள்
கருத்துரையிடுக