சூந்த குளமும் அம்மையும்
மனிதனே குளிக்க மறுத்துவிட்ட சூந்தகுளத்தில் குளிக்க வைத்து தூக்கிச் செல்கின்றனர் அறம் வளர்த்த அம்மையை. சாக்கடை நறுமணம் கமழ பல்லக்கில் செல்லும் அவளுக்கு இன்று திருமணநாள். அதற்காக தாணுமூர்த்தி ஒன்றும் மூக்கைப் பிடித்துக்கொண்டு ஓடிவிடமாட்டார். அவர் குளித்து எழும் தெப்பக்குள புனிதமோ அதற்கும் மேலான ஒன்று. தண்ணீரின் நிறம் பச்சை என தெய்வத்தால் முடியாத அறிவியலால் சாத்தியமாகாத ஒன்றை மனிதன் நிரூபித்துக் காட்டியுள்ளான். குளம் புனிதம், குன்று புனிதம், கடற்கரை புனிதம் என்றதெல்லாம் கடவுளுக்கானதா? கடவுளின் பெயரால் இயற்கையை காப்பாற்றும் முன்னோர்களின் சூட்சமமா? கோயிலே கூடாது என்றவர்கள் குன்றுகளை பெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தெய்வம் இருக்கின்றது என்பர்வகள் அதன் சீரழிவுக்கு தெய்வத்தை பழக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதுதான் மனிதனின் மகத்தான குணம். குமரன் இருக்கும் குன்றெல்லாம் இன்று ஓரளவேனும் மிச்சப் பிடித்து இருக்கின்றது. முருகனே மலை என்றால், வெடி வைத்து முருகனை பிளக்க மனம் வராது. அப்படியே ஒருவன் இருந்தாலும் முருகனின் பெயரால் சமூகம் அந்த மலையை காக்கும் என்று தான் ஆண்டியாய் அவனை மேலேற்றி இருக்க முடியும...