ஓவியர் ஜீவா "காற்றில் கரைந்த திரைகள்"

 நாகர் திரையரங்குகள் குறித்த ஓர்மையை கிளறி விட்டது ஓவியர் ஜீவா அவர்களின் "காற்றில் கரைந்த திரைகள்" என்கிற கோவை திரையரங்குகள் குறித்த கட்டுரை. 


"ஒற்றைத்திரை" அரங்குகள் இல்லாமல் போகுமோ என்கிற அவரின் ஆதங்கத்தில் இருந்து விரிகிறது கோவை நகரின் நூற்றாண்டு செல்லுலாய்ட் அரங்க சரித்திரம், ஒரு ரசிகனாக வரைகலை கலைஞராக விவரிக்கும் திரையரங்கு மற்றும் திரை அரங்க முதலாளிகள் குறித்த பிரமிப்பூட்டும் நினைவுகளோடு தியேட்டர் தின்பண்டங்கள் குறித்த அவர் தரும் தகவலும் நல்ல நினைவுகள் . பல கிளைகள் விரித்த சைவ உணவகம் ஒன்று கீரைவடையையும் காப்பியும் சுவைத்த தியேட்டர் கேண்டீனில் இருந்து ஆரம்பித்த வரலாறு, நடிகர் பி. எஸ். வீரப்பா தியேட்டர் முதலாளியாக வைத்திருந்தது, TKS சகோதரர்களில் நாடக அரங்கு என அரிய தகவல்கள் ஏராளம்


டிலைட் தியேட்டர் உரிமையாளர் டிலைட் சேட் என்கிற ராம் சொரூப் அவரின் சித்திரம் படிக்கும் போது வரையப்பட்ட ஒரு உயரமான திரைச்சீலை போன்று காட்சிப் படுகிறது. சினிமா குறித்து இல்லாமல் பேசு பொருளை கட்சிதமாக உள்ளடக்கிய கட்டுரை. அருமை அண்ணாச்சி. 

கோவை திரையரங்குகளில் 

கோவையில் வாழ்ந்த மூன்று மாத அனுபவம் உண்டு. அதுவே மறக்காத போது, எத்தனை பத்தாண்டுகள். தொழிலும் ரசனையும் பிணைந்த வாழ்வு வரம். 


அந்த மூன்று மாதங்களில் ஞாயிற்றுக் கிழமைகள் தோறும் நான்கில் மூன்று காட்சிகள் பார்த்து விடுவோம் சைக்கிளில் பறந்து பறந்து மிதித்து நானும் நண்பன் கண்ணனும். இடையே அப்போது நகருக்கு எல்லையாக இருந்த பீளமேட்டில் இருந்த ரூமுக்கு வந்து மதிய உணவும் உண்டிருப்போம். ஆனால் பாதிக்கு மேல் தியேட்டர்களில் ஆங்கிலம் ஹிந்தி சினிமாக்களே ஓடும். ஆங்கிலம் என்றால் அப்போதைய இங்கிலீஷ் படங்கள் பாதி. ரங்கீலா மேட்னி ஷோவில் அமர்ந்து 70mm திரையில் ஊர்மிளா நடந்து வரும் ஆரம்பக் காட்சியை கண்கள் விரிய காணும் போது ரஹ்மானின் இசையும் பிபியை எகிற செய்தது தனி அனுபவம் எனக்கு உண்டு. என்றும் மறக்காது.


நாகர்கோவிலிலும் இப்போது தொடர்ந்து இயங்குவது இரண்டு தியேட்டர்கள் தான். அதுவும் அந்தகால "சள்ளு தியேட்டர்கள்" போல், காது கிழிக்கும் விசில் சத்தம் இப்பொழுது எல்லாம் மௌனமாகி விட்டது உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுசீந்திரம் திருவிழா

அம்மையப்ப பிள்ளை

இசை