கவிதை
வானத்தில் வல்லூறுகள்
வட்டமிட்டவாறு உள்ளன.
செழித்த பிரதேசங்களில் கிடைக்கப் பெறாத
இரைகளுக்கு அலைந்தவை அவை,
பிணம் என்று வந்து வந்து ஏமாந்து தான்
போகின்றன.
வேட்டையாடும் வேங்கைகள் எனக்
காட்டித் திரிபவை.
பிணப் பிரதேசங்களின் புழுக்கள் கூட
தம்மை எதிர்கும்,
வயிறுக்குள் குடைந்து மலங்கழிப்பை
தீவிரமாக்கும் என்பது தெரிந்தே பறக்கின்றன.
வீரனென்று கொக்கரிக்கும் முட்டாள் வல்லூறுகளுக்கு
உள்ளூர் ஒற்றைக்கால் கொக்குகளும் கவிபாடித் திரிகின்றன.
கொக்குகள் இலாகாக்களை குறிவைத்தாகி விட்டது.
கொக்குகள் குணம் இடுக்கண் வருங்கால் நகுக.
இடுக்கண் என்பது பிறர் இடுக்கண்.
புழுக்கள் மனரீதியாக ஒன்றுகூட தொடங்கிவிட்டன.
பிணந்தின்னிக் கழுகுகளின் வேரறுக்க.
புழுக்களின் கைகளில் நீலநிற மையுண்டு.
கருத்துகள்
கருத்துரையிடுக