இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதை

 வானத்தில் வல்லூறுகள் வட்டமிட்டவாறு உள்ளன. செழித்த பிரதேசங்களில் கிடைக்கப் பெறாத இரைகளுக்கு அலைந்தவை அவை, பிணம் என்று வந்து வந்து ஏமாந்து தான் போகின்றன. வேட்டையாடும் வேங்கைகள் எனக் காட்டித் திரிபவை. பிணப் பிரதேசங்களின் புழுக்கள் கூட தம்மை எதிர்கும், வயிறுக்குள் குடைந்து மலங்கழிப்பை தீவிரமாக்கும் என்பது தெரிந்தே பறக்கின்றன. வீரனென்று கொக்கரிக்கும் முட்டாள் வல்லூறுகளுக்கு உள்ளூர் ஒற்றைக்கால் கொக்குகளும் கவிபாடித் திரிகின்றன. கொக்குகள் இலாகாக்களை குறிவைத்தாகி விட்டது. கொக்குகள் குணம் இடுக்கண் வருங்கால் நகுக.  இடுக்கண் என்பது பிறர் இடுக்கண். புழுக்கள் மனரீதியாக ஒன்றுகூட தொடங்கிவிட்டன. பிணந்தின்னிக் கழுகுகளின் வேரறுக்க. புழுக்களின் கைகளில் நீலநிற மையுண்டு.

கவிதை

காரின் பின்பக்க கண்ணாடி வழியே காருக்குள் பிம்பமாய் விழுந்துவிட்ட அடிவானப் பறவை ஒன்று காரின் நீள அகலங்களுக்குள் சீராக வட்டமிடுகிறது. அதை ரசித்தபடி பின்தொடர்ந்து வந்த நான் தான் வழிதவறி வீடு வந்து சேர்ந்துவிட்டேன்.

கல்லாக்காரரின் அன்பு

 அவன் ஒரு மாற்றுத் திறனாளி சிறுவன். உள்ளூர் ஹோட்டலுக்கு தினமும் இரவு சாப்பிட வருகிறான். இரண்டு கைகளால் அமிர்தத்தை புசிப்பது போல முக மலர்ச்சியுடன் அள்ளி தின்று, இலையையும் மிகப் பொறுப்போடு அப்புறப் படுத்திவிட்டு பாதி கழுவி முடித்த கையோடு கல்லா அருகே வந்தவன், சர்வரை எதிர்பாராமல் ₹200 நீட்டியவாறே இரண்டு பரோட்டா ஒரு நெய் என கத்த, ஹோட்டல் முதலாளி ₹66 போக மீதி ₹33 இதோ என நீட்டியபடி இன்னொரு கையில் நூறு ரூபாயை மறைத்து வைத்துக் கொள்கிறார். அவன் 200 கொடுத்தேன் என்கிறான். இவர் இல்லை நூறு என்கிறார். அவன் இன்னும் சிரித்தவாறே இல்லை 200 என்கிறான். அவருக்கும் முகம் மலரத் தொடங்க இல்லை நூறு என முரண்டு பிடிக்கிறார். இவன் இன்னும் தர்க்கமிட அவரும் தர்க்கமிட மாறி மாறி இருவர் முகமும் பூக்கத் தொடங்க புன்னகை பரவுகிறது இருவரிடமும், எல்லோரிடமும்.  ஒரு கட்டத்தில் ஒளித்து வைத்த ₹100 மெதுவாக நீட்ட விருட்டென பறித்துக் கொண்டு "சுறீரென" காலை இழுத்த படி நடக்கத் தொடங்கினான். சாப்பிட்ட காசும் கொடுத்து விட்டு எல்லோருக்கும் புன்னகையும் அளித்து விட்டு அவன் கீழிறங்கி போகவும் ஹோட்டலில் பரவுகிறது ஒரு வெற்றி. கல்லாக்கா...

கவிதை

 நேற்று இரவு நண்பர் ஒருவரின் வீட்டுக் கூடத்தில் இருந்தோம். பேச்சினிடையே  வாசலை பார்த்து  "மெர்சி..." என்றார். "நாயா" என்றேன்.  "இல்லை பூனை" என்றவரின் முகத்தில் ஆட்டுக்குட்டியை தாங்கிய ஏசுவின் சாயல். நாயாக இருந்தால் என்ன? பூனையாக இருந்தால் என்ன?