கவிதை
கலைந்து குவியலாய்
கிடக்கும் ஆடைகளில்
இருந்து ஒவ்வொன்றாய்
உருவி மடித்தபடி இருக்கிறாய்.
வெகு நேர்த்தியாக.
போர் அற்ற நாட்களில்
லாயத்தினை அடையும்
குதிரைகள் போல்
எதற்கு பின் எதுவென
உன் கை புகுகின்றன ஆடைகள்.
பாவும் உடையும் நெருங்கிப்
பின்னியது போன்ற
உன் மௌனப் புன்னகையை
ரசித்தவாறு அவை தன் மடிப்புகளை
தானே மடித்துக் கொள்கின்றன.
யாவும் யாவையும் மடித்த பின்
ஆடைகளை அடுக்கி
எடுத்துச் செல்கிறாய்
அடுக்குகளில் கைமறதியாய்
மடித்து உள்ளே வைக்கப்பட்டது
உன்னையும் சேர்த்து!
கருத்துகள்
கருத்துரையிடுக