திருவட்டாறு ஆதிகேசவன்.
மீள் திருவட்டாறு ஆதிகேசவன்: இரண்டு மூன்று மணிகள் வெவ்வேறு சப்தங்களில் ஒரே நேரத்தில் ஒருதாள லயத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் பிரகாரங்கள் சுற்றி வடக்கு பிரகாரம் உள் நுழைந்தேன். தீபாராதனைக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தாகி விட்டது. மேற்கு பிரகாரம் வழி உள்ளே நுழைகையில், கதவில் செதுக்கப்பட்டிருந்த பள்ளிகொண்ட பெருமாளும் பரிவார தெய்வங்களின் தத்துரூப கலையை விட்டுவர மனமில்லாமல் வந்தேன். ஒரு சங்கொலியின் ஊதல் உள் இருத்தியது. பெரியவர் ஒருவர் அனாயசமாக மூச்சை இழுத்து ஊதி கொண்டிருந்தார். எந்த தெய்வம் என்று பார்த்தேன். மேலே பாலாலய ஆதிகேசவன் என்றிருந்தது. வெள்ளைச்சர மல்லிகை இத்தனை அழகாக கோர்க்க முடியுமா எனும் படி அடுக்கி வைக்கப் பட்டிருந்தது. ஆதிகேசவ்ன் முகம் தூரத்தில் தெரியவில்லை. சற்று நெருங்கிப் போனேன். ஆதிகேசவன் பின்னிருந்த ஒற்றை எண்ணெய் விளக்கு சுடராடி, பின்னிருந்த சுற்றடுக்கு கண்ணாடியில் அடுக்குச் சுடராய் அசைந்து கொண்டிருந்தது. முகம் ஒருமுறை வானத்தை நோக்கி திரும்பியது. நான் நின்றிருந்த திசையில் மேலே மூலவர் கருவறையின் முகடு. மரவேலைகளால் செம்பு பொதியப்பட்ட முகடு. என...