பிறழ்வு
எவர் எனும் தலைப்பில் பாதசாரியின் கவிதை ஒன்று உண்டு. "நாலுபேர் பைத்தியம் எனச் சொல்லும் கசங்கியத் தோற்றத்தில் வந்தவர் கை ஏந்தினார் என்னிடம். மேலாடைப் பையில் கைவிட்டு காசு எடுக்கும் முன் ஆளைக் காணோம். வெளியில் எடுத்த காசை எனக்கு நானே கொடுத்துக் கொண்டாயிற்று ." பிறரை எதிர்கொள்ளும் யதார்த்தம் இது தான். உங்களை எதுவாக எடை போடுகிறார்களோ அங்கு இல்லாமல் இருங்கள். அவர்கள் இடும் எடைகளை அவர்களே சுமக்க வேண்டியது வரும் என்பதே உண்மை. நீங்கள் எழுதும் ஒரு பதிவில் பைத்தியம் என்று எழுத கைகள் நடுங்கியதுண்டா? பலமுறை எனக்கு நேர்ந்தது உண்டு. அந்த வார்த்தையை யாரை நோக்கியும் அல்ல எதன் பொருட்டும் வசை சொல்லாக சொல்ல மனம் கூசும். மனநிலை சரியில்லை என்பதும் கற்பிழந்தவள் என்று வசை சொல் சொல்லுவதும் வேறு வேறு இல்லை. கற்பு என்பதும் தெளிந்த மனநிலை என்பதும் இவ்வுலகில் கற்பனையான ஒன்று தான். மனநிலை குறித்தோ கற்பு குறித்தோ இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் வன்முறை ஏவுவது என்பது மட்டுமே இங்கு பிறழ்வு நிலை ஆகும். சமூகத்தில் கொள்கை கடிவாளம் மட்டுமே போட்டுத் திரிந்து மனித யதார்த்தவாதம் தெரியாத பல வறட்டு கொள்க...