ஓவியர் ஜீவா "காற்றில் கரைந்த திரைகள்"
நாகர் திரையரங்குகள் குறித்த ஓர்மையை கிளறி விட்டது ஓவியர் ஜீவா அவர்களின் "காற்றில் கரைந்த திரைகள்" என்கிற கோவை திரையரங்குகள் குறித்த கட்டுரை. "ஒற்றைத்திரை" அரங்குகள் இல்லாமல் போகுமோ என்கிற அவரின் ஆதங்கத்தில் இருந்து விரிகிறது கோவை நகரின் நூற்றாண்டு செல்லுலாய்ட் அரங்க சரித்திரம், ஒரு ரசிகனாக வரைகலை கலைஞராக விவரிக்கும் திரையரங்கு மற்றும் திரை அரங்க முதலாளிகள் குறித்த பிரமிப்பூட்டும் நினைவுகளோடு தியேட்டர் தின்பண்டங்கள் குறித்த அவர் தரும் தகவலும் நல்ல நினைவுகள் . பல கிளைகள் விரித்த சைவ உணவகம் ஒன்று கீரைவடையையும் காப்பியும் சுவைத்த தியேட்டர் கேண்டீனில் இருந்து ஆரம்பித்த வரலாறு, நடிகர் பி. எஸ். வீரப்பா தியேட்டர் முதலாளியாக வைத்திருந்தது, TKS சகோதரர்களில் நாடக அரங்கு என அரிய தகவல்கள் ஏராளம் டிலைட் தியேட்டர் உரிமையாளர் டிலைட் சேட் என்கிற ராம் சொரூப் அவரின் சித்திரம் படிக்கும் போது வரையப்பட்ட ஒரு உயரமான திரைச்சீலை போன்று காட்சிப் படுகிறது. சினிமா குறித்து இல்லாமல் பேசு பொருளை கட்சிதமாக உள்ளடக்கிய கட்டுரை. அருமை அண்ணாச்சி. கோவை திரையரங்குகளில் கோவையில் வாழ்ந்த மூன்று மாத அ...