இடுகைகள்

ஜனவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுசீந்திரம் திருவிழா

சுசீந்திரம் திருவிழா பதிவு 1 நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் சுசீந்திரம் கோவில் திருவிழா தொடங்குகிறது. பெருந்தெய்வ வழிபாட்டில் மகாத்ஸ்வங்கள் முக்கியத்துவம் வாய்ந்த வருடாந்திர கொண்டாட்டம் ஆகிறது. ஆகம விதிப்படி ஒரு மகாத்ஸ்வம் தவிர்க்க முடியாத ஏழு நிகழ்வுகள் அல்லது விழாவினை நிகழ்த்தியிருக்க வேண்டும். அவை, 1. த்வஜாரோஹணம். கொடியேற்ற நிகழ்வு. இது முதல்நாள் காலை. மகா உற்சவத்தின் ஆரம்பத்தை இது அறிவிக்கிறது. 2. அங்குரம் .  நவதானியங்கள் பாத்திரத்தில் நிரப்பி அவற்றை முளைவிட செய்து செழுமையை கொண்டாடுவது. 3. ம்ர்கயோத்ஸவம் என்கிற வேட்டை. வேட்டையாடுவதை குறிப்பது. அதன் அடையாளமாக சாமி வாகனத்தில் வேட்டையாடும் ஆயுதங்களை வைத்திருப்பது. ஏழாம் திருவிழா கைலாசபர்வத வாகனம் வேட்டையின் நிறைவை குறிப்பது. 4. சயனத்சவம் :   கடவுள் துயில் கொள்ளுவதை கொண்டாடும் நிகழ்வு. ஏழாம் திருவிழா காலை, எல்லா சாமி விக்ரகங்களும் பல்லக்குகளில் வீதி வலம் வருவர். 5. ரதோத்ஸ்வம் எனும் யாத்ராத்ஸ்வம். தேரோட்ட நிகழ்வு. சாமி அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஊர்சுற்றி வருவது சுற்று உலா என ஆகமங்கள் கூறினாலும், பலர் இந்நிகழ்வை காண சுற்ற...